தற்போது தங்களது கோரிக்கை குறித்து நடவடிக்கை எடுக்கப்படாமல் இருப்பதை கண்டித்து, தொடர்ச்சியாக பொதுமக்கள் சிலர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்யும் சம்பவங்கள் நடந்து வருகிறது.

ஆட்சியர் அலுவலக வளாக பாதுகாப்பு பணிகளில் ஏராளமான போலீசார் ஈடுபட்டிருந்தாலும் தொடர்ந்து இது போன்ற தற்கொலை முயற்சி சம்பவங்கள் நடந்து வருகிறது. இதனை தடுக்கும் வகையில் குறைதீர் கூட்டங்கள் நடைபெறும் நாட்களில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ஆட்சியர் அலுவலக பிரதான நுழைவு வாயில் பகுதி, மற்ற 3 நுழைவு வாயில் பகுதிகளிலும் கண்காணிக்கும் வகையில், போலீசாரின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.
மனு கொடுக்க வரும் பொதுமக்கள் கொண்டு வரும் பைகள் மற்றும் பொருட்களை நுழைவு வாயிலில் அமைக்கப்பட்டுள்ள சோதனை சாவடியில் முழுமையாக சோதனை செய்யப்பட்ட பின்பு, அவர்கள் ஆட்சியர் அலுவலகத்திற்குள் செல்வதற்கு போலீசார் அனுமதி வழங்குவார்கள். மனு கொடுக்க வரும் பெண்களிடம், அங்கு பாதுகாப்பு பணியில் இருக்கும் பெண் போலீசார் சோதனை செய்வார்கள். மேலும் ஆட்சியர் அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஊழியர்கள் தங்களது அடையாள அட்டையை காண்பித்த பின்னரே உள்ளே செல்வதற்கு போலீசார் அனுமதிக்கின்றனர்.
No comments:
Post a Comment