இராஜபாளையத்தில் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடத்திற்கு வருவாய் துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கேகேஎஸ்.எஸ். ஆர். ராமச்சந்திரன் அடிக்கல் நாட்டில் துவங்கி வைத்தார்.
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் மாணிக்கத்தான் கிணறு சாலையில், புதிதாக ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்டிடம் கட்டுவதற்குஊராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதற்கு, அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது .

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், 341.50 லட்சம் மதிப்பீட்டில் ஆன புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டை துவங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் ஜெ. மேகநாத ரெட்டி, தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம் குமார், இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன், யூனியன் சேர்மன் சிங்கராஜ் மற்றும் இராஜபாளைய நகர மன்றத் தலைவி பவித்ரா ஷியாம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செயற்பொறியாளர் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment