அருப்புக்கோட்டை பழைய பேருந்து நிலையம் புதிய பேருந்து நிலையம் பஜார் உள்ளிட்ட பகுதியில் உள்ள சிக்னல் கம்பங்கள் பராமரிப்பின்றி காணப்படுகிறது. இந்நிலையில் பூக்கடை பஜார் பகுதியில் உள்ள சிக்னல் கம்பம் திடீரென உடைந்து விழுந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
அதிர்ஷ்டவசமாக அந்த சமயத்தில் யாரும் இல்லாத காரணத்தால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. பராமரிப்பின்றி காணப்படும் சிக்னல் கம்பங்களை உடனடியாக அகற்றிவிட்டு புதிய சிக்னல் கம்பங்களை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:
Post a Comment