அருப்புக்கோட்டையில் அங்கன்வாடி பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று யூனியன் அலுவலகத்தில் உள்ள குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தை முற்றுகையிட்டு அருப்புக்கோட்டை வட்டத்தை சேர்ந்த தமிழ்நாடு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

அருப்புக்கோட்டை வட்ட அங்கன்வாடி பணியாளர்கள் சங்க தலைவர் கலைச்செல்வி தலைமையில் செயலாளர் மலர்க்கொடி பொருளாளர் சித்ரா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த முற்றுகை போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.
No comments:
Post a Comment