விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல் பகுதியில், சுதந்திர போராட்ட வீரர், செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரம் பிள்ளை நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. மேற்கு மாவட்ட அதிமுக சார்பில், முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தலைமையில், கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. அவர்களின் 86வது நினைவு நாள் தினம் அனுசரிக்கப்பட்டது.
திருத்தங்கல் பகுதியில் உள்ள சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனார் உருவச்சிலைக்கு, முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செய்தார். நிகழ்ச்சியில், முன்னாள் எம்எல்ஏ ராஜவர்மன் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment