பெய்த மழையில் கோரையார் காலணி குடியிருப்பு பகுதியில் சூழ்ந்த மழை நீர். - தமிழக குரல் - விருதுநகர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 17 November 2022

பெய்த மழையில் கோரையார் காலணி குடியிருப்பு பகுதியில் சூழ்ந்த மழை நீர்.


விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் அருகே உள்ள தேவதானம் பகுதியில் கோரையாறு காலனி உள்ளது. இந்த காலணி பகுதியில், 10க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதியில்  மழை நீர் சூழ்ந்து  உள்ளது. குறிப்பாக, சண்முகசுந்தரம் வயது 57 .இவரது மனைவி மாற்றுத்திறனாளி முனியம்மாள் வயது 63. இவர்களுக்கு, அய்யனார் வயது 40. பழனி வயது 42. என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.



இவர்கள் இருவருமே மாற்றுத்திறனாளி. இவர்கள் குடியிருக்கும் பகுதி முழுவதும் மழை நீர் சூழ்ந்துள்ளது. மாற்றுத்திறனாளிகள் மூன்று பேராலும் இயற்கை உபாதை கழிப்பது கூட வெளியே வர முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இது குறித்து, முத்துசாமிபுரம் பஞ்சாயத்து தலைவருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதேபோல் ,சட்டமன்ற உறுப்பினர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் என அனைவருக்கும் தகவல் கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.


இராஜபாளையம்  வட்டாட்சியர் நேரில் சென்று பார்வையிட்டு சிவகாசி வருவாய்  கோட்டாட்சியரிடம் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. சிவகாசி வருக வருவாய் கோட்டாட்சியர், தண்ணீரை மோட்டார் மூலம் வெளியேற்ற முத்துசாமிபுரம் பஞ்சாயத்து தலைவருக்கும், வட்டார வளர்ச்சி அலுவலருக்கும் உத்தரவிட்டுள்ளார்.  ஆனால், இருவரும் அதை அலட்சியப்படுத்தி நடவடிக்கை எடுக்க வில்லை என மாற்று திறனாளிகள் குற்றம் சாட்டிகின்றனர். உடனடியாக, தண்ணீர் வெளியேற்றி தங்கள் வெளியே செல்வதற்கு வழி செய்ய வேண்டும் என, மாவட்ட ஆட்சியருக்கும், தமிழக அரசுக்கும் கோரிக்கை வைத்துள்ளனர். 

No comments:

Post a Comment

Post Top Ad