சிவகாசி அருகே பள்ளியில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம். - தமிழக குரல் - விருதுநகர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 17 November 2022

சிவகாசி அருகே பள்ளியில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்.


விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள கிருஷ்ணப்பேரி பகுதியில் உள்ள காமாக் மேல்நிலைப்பள்ளியில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. நுகர்வோர் பாதுகாப்பு சேவை மையம் மாநில தலைவர் சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில், சிவகாசி வட்டார போக்குவரத்து அலுவலர் குமரவேல் கலந்து கொண்டு, சாலை பாதுகாப்பு குறித்து மாணவர்கள் மத்தியில் பேசினார். 

அவர் பேசும்போது, சாலை பாதுகாப்பு என்பது, உயிர் பாதுகாப்பு. சாலைகளை கடக்கும் போது இரு புறங்களையும் கவனித்து கடக்க வேண்டும். இருசக்கர வாகனத்தில் இருவருக்கு மேல் கண்டிப்பாக பயணம் செய்யக்கூடாது. பள்ளி மாணவ, மாணவிகள் இருசக்கர வாகனங்களை ஓட்டுவதற்கு அனுமதி கிடையாது. பெற்றோருக்கு தெரியாமல் அவரது வாகனங்களை எக்காரணம் கொண்டும் எடுக்கக்கூடாது. இருசக்கர வாகனங்களை ஓட்டும் போது கண்டிப்பாக தலைக்கவசம் அணிந்திருக்க வேண்டும். 


வாகனத்தின் ஆவணங்கள், காப்பீடு கட்டியதற்கான ஆவணங்கள், ஓட்டுனர் உரிமம் இருக்க வேண்டும். இருசக்கர வாகனங்களில் செல்லுபவர்கள் 40 கிலோமீட்டர் வேகத்தில் சென்றால், நலமாக வீட்டுக்கு செல்ல முடியும். அதிக வேகத்தில் சென்று விபத்துகளில் சிக்கினால் மருத்துவமனைக்குத்தான் செல்ல வேண்டியது இருக்கும். சாலை விதிகளை மதிப்பது உங்களுக்கு மட்டுமல்லாமல், உங்களுக்கு எதிராக பயணித்து வருபவர்களுக்கும் பாதுகாப்பாக இருக்கும் என்று பேசினார். பள்ளி தலைமை ஆசிரியர் கணேசன் நன்றி கூறினார். 

No comments:

Post a Comment

Post Top Ad