சிவகாசியைச் சேர்ந்த முதியவருக்கு, 10 ஆண்டுகள் சிறை தண்டனை; போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு. - தமிழக குரல் - விருதுநகர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 16 November 2022

சிவகாசியைச் சேர்ந்த முதியவருக்கு, 10 ஆண்டுகள் சிறை தண்டனை; போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு.


விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன் (59). கூலி வேலை பார்த்து வரும் இவர், கடந்த 2019ம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் சிவகாசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.  

சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார், லோகநாதனை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். இது குறித்த வழக்கு திருவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பூரண ஜெயஆனந்த், பாலியல் குற்றவாளி லோகநாதனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 15 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். 

No comments:

Post a Comment

Post Top Ad