அருப்புக்கோட்டை 31வது வார்டு பகுதியில் பகுதி சபா கூட்டம் நகர் மன்ற தலைவர் சுந்தரலட்சுமி தலைமையில் நகராட்சி ஆணையாளர் அசோக்குமார் நகர் மன்ற உறுப்பினர் ஜெயக்கவிதா முன்னிலையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் 31வது வார்டு பகுதியில் நகராட்சி பூங்கா அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

மேலும் தாமிரபரணி குடிநீர் வழங்க வேண்டும் எனவும் பகல் நேரத்தில் குடிநீர் திறந்து விட வேண்டும் எனவும் வலியுறுத்தினர். பொதுமக்களின் கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என நகர் மன்ற தலைவர் உறுதி அளித்தார்.
No comments:
Post a Comment