அருப்புக்கோட்டை புளியம்பட்டியில் பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன இங்கு கம்பு, சோளம் உள்ளிட்ட பயிர்கள் பயிரிடப்படுகின்றன இந்த பயிர்களை காட்டுப்பன்றிகள் நாசம் செய்து வருவது தொடர்கதையாக போகிறது. இந்நிலையில் புளியம்பட்டி பாவடி தோப்பு பகுதியில் காட்டு பன்றிகளை கட்டுப்படுத்த வனத்துறை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாஜக சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் வனத்துறையை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டது. பாஜக கிழக்கு மாவட்ட பார்வையாளர் வெற்றிவேல் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கிழக்கு மாவட்ட பொதுச்செயலாளர் சீதாராமன் மாவட்ட விவசாய அணி தலைவர் அழகர்சாமி தரவு மேலாண்மை பிரிவு மாவட்ட தலைவர் சுரேஷ் மாவட்ட துணைத் தலைவர் ராஜேஸ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment