போலி சி.பி.ஐ அதிகாரி கைது. - தமிழக குரல் - விருதுநகர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 3 November 2022

போலி சி.பி.ஐ அதிகாரி கைது.

அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் எம்.டி.ஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் கோகிலா(34) இவர் நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் கம்ப்யூட்டர் ஆப்ரேட்டராக பணியாற்றி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு செல்போனில் கோகிலாவிடம் பேசிய மர்ம நபர் தன்னை சி.பி.ஐ அதிகாரி என கூறி திருட்டு வழக்கில் உங்களை விசாரிக்க வேண்டும் என கூறியுள்ளார். இதனால் கோகிலா அச்சமடைந்துள்ளார். 

மேலும் கோகிலாவை விசாரணைக்கு வர வேண்டும் என்று விருதுநகர் வரவழைத்து கோகிலாவிடமிருந்து 4 சவரன் தங்க நகை செல்போன் மற்றும் இருசக்கர வாகனத்தை பறித்துக்கொண்டு அந்த மர்ம நபர் தப்பியோடியனார். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கோகிலா நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 


போலீசார் விசாரணையில் சி.பி.ஐ அதிகாரி போல் நடித்து நகை செல்போன் இருசக்கர வாகனத்தை பறித்து சென்றது வேலூர் மாவட்டம் குப்பம் அருகே உள்ள சத்திரம்புதூரை சேர்ந்த அன்புகுமார்(27) என தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் வேலூர் சென்று அன்புகுமாரை அருப்புக்கோட்டை நகர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் நகை செல்போன் இருசக்கர வாகனத்தை பறித்துக்கொண்டு தப்பியோடியதை ஒப்புக்கொண்டார். 


இதனையடுத்து அன்பு குமாரிடமிருந்து செல்போன் நகை இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் அன்பு குமாரை கைது செய்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad