அருப்புக்கோட்டை நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள மின் விளக்குகள் இரவு நேரத்தில் எரியாமல் இருள் சூழ்ந்து காணப்பட்டது. மேலும் அலுவலக வளாகத்தில் உள்ள தோட்டமும் வேலியில்லாமல் பாதுகாப்பின்றி காணப்பட்டது. வேலி இல்லாததால் பொதுமக்கள் உள்ளே சென்று மரக்கன்றுகள் சேதம் அடையும் சூழல் ஏற்பட்டது.
இதனை சரி செய்ய சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் அலுவலக வளாகத்தில் உள்ள அனைத்து மின்விளக்குகளும் புதிதாக மாற்றப்பட்டு சரி செய்யப்பட்டது. மேலும் தோட்டத்திற்கு வேலியும் அமைக்கப்பட்டது.

No comments:
Post a Comment