அருப்புக்கோட்டை அருகே சின்ன செட்டிகுறிச்சியில் உள்ள சமத்துவபுரத்தில் 100 வீடுகள் கட்டப்பட்டுள்ளன இதில் 79 வீடுகளில் பயனாளிகள் குடியிருந்து வருகின்றனர். மீதமுள்ள 21 வீடுகளுக்கு தகுதியான பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
ஆதலால் சின்ன செட்டிகுறிச்சி கிராமத்தை சுற்றி 3 கிலோமீட்டர் சுற்றளவில் வசிக்கும் தகுதியான பயனாளிகள் வரும் 21ம் தேதிக்குள் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தங்கள் விருப்ப மனுவை வழங்கலாம் என மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி அறிவித்துள்ளார்.

No comments:
Post a Comment