அருப்புக்கோட்டை காந்திநகர் பகுதியில் மதுரையில் இருந்து திருச்செந்தூர் செல்லும் பேருந்துகள் பொதுமக்களை ஏற்றிச் செல்வதற்காக ரூ 1 கோடி மதிப்பில் நவீன பேருந்து நிலையம் கட்டப்பட்டது. ஆனால் இந்த பேருந்து நிலையத்திற்குள் செல்லாமல் பேருந்து புறவழிச்சாலையிலே நின்று பொதுமக்களை ஏற்றுகின்றனர்.
இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைகின்றனர் அதிலும் குறிப்பாக விஷேச நாட்களில் எந்த ஒரு பேருந்தும் வருவதில்லை என்று புகார் எழுந்துள்ளது. எனவே பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்குமா அரசு என சமூக ஆர்வலர்கள் கேள்வி கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:
Post a Comment