அருப்புக்கோட்டை வெள்ளைக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் சந்துரு பெயிண்டிங் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் குழந்தைவேல்புரத்தில் உள்ள ஹரிகிருஷ்ணா - பாக்கியம் என்ற ஓய்வு பெற்ற ஆசிரியர் தம்பதியர் வீட்டில் சந்துரு பெயிண்டிங் வேலை செய்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் கீழே விழுந்து காயமடைந்தார்.
இதனையடுத்து அவர் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து நகர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:
Post a Comment