விருதுநகர் மாவட்டத்தில் 1997ம் ஆண்டு பணியில் சேர்ந்த 111 போலீஸ் ஏட்டுகளுக்கு சிறப்பு சார்பு ஆய்வாளர்களாக பதவி உயர்வு அளித்து மதுரை சரக டி.ஐ.ஜி பொன்னி உத்தரவிட்டுள்ளார். இதில் அருப்புக்கோட்டை உட்கோட்டத்திற்குட்பட்ட நகர், தாலுகா, பந்தல்குடி & மகளிர் காவல் நிலையங்களில் பணிபுரியும் 21 போலீஸ் ஏட்டுகள் சிறப்பு சார்பு ஆய்வாளர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். இந்நிலையில் பதவி உயர்வு பெற்றுள்ள போலீசாருக்கு சக போலீசார் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

No comments:
Post a Comment