அருப்புக்கோட்டை நகராட்சியில் பகுதி சபா கூட்டம் ஒவ்வொரு வார்டுகளிலும் பகுதி வாரியாக பிரித்து கடந்த 1ம் தேதி முதல் வரும் 10ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில் 30வது வார்டு பகுதியில் பகுதி சபா கூட்டம் நகர் மன்ற உறுப்பினர் சுசீலா தேவி தலைமையில் நடைபெற்றது.

அதேபோல் 36வது வார்டு பகுதியில் பகுதி சபா கூட்டம் நகர் மன்ற உறுப்பினர் சிவகாமி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் பகுதி உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் கழிவு நீர் கால்வாய் சுத்தம் செய்ய வேண்டும் சாலைகள் அமைக்க வேண்டும் தெருவிளக்குகள் அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என நகர் மன்ற உறுப்பினர்கள் உறுதி அளித்துள்ளனர்.
No comments:
Post a Comment