சேறும் சகதியுமான சாலைகளால் அவதிப்படும் பொதுமக்கள். - தமிழக குரல் - விருதுநகர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 8 November 2022

சேறும் சகதியுமான சாலைகளால் அவதிப்படும் பொதுமக்கள்.

அருப்புக்கோட்டை கணேஷ் நகர் கிழக்கு பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். ஆனால் இப்பகுதியில் பொதுமக்கள் அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாமல் அவதிப்பட்டு வருவதாக புகார் தெரிவிக்கின்றனர். 

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் தங்கள் பகுதிக்கு தற்போது வரை முறையான சாலை வசதிகள், வாறுகால் வசதிகள், இல்லை மழை நேரங்களில் வீதிகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால் நோய் தொற்று அபாயம் உள்ளது. சேறும் சகதியுமான சாலைகளில் பள்ளிக்கோ, கல்லூரிக்கோ, அல்லது கடைகளுக்கோ, அவசர தேவைக்கு மருத்துவமனைக்கோ செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இரவு நேரத்தில் போதுமான மின்விளக்குகள் இல்லாததால் திருட்டு பயமும் ஏற்பட்டுள்ளது. 


அடிப்படை வசதிகள் கோரி நகராட்சி சார்பில் அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவே நகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேபோல் பாளையம்பட்டி ஊராட்சி விரிவாக்க பகுதிகளில் சாலை வசதி உள்ளிட்ட எந்த வசதிகளும் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். விரிவாக்க பகுதி முழுவதும் சேறும் சகதியுமாக காணப்படுகிறது. 


இதனால் அவ்வழியே செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் மாணவர்கள் அடிக்கடி விழுந்து விபத்து ஏற்படுகிறது. முதியவர்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். எனவே போர்க்கால அடிப்படையில் விரிவாக்க பகுதிகளுக்கு சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

No comments:

Post a Comment

Post Top Ad