அருப்புக்கோட்டை அருகே கோபாலபுரத்தில் இருந்து பாலவநத்தம் செல்லும் சாலை குண்டும் குழியுமாக காணப்படுகிறது. பாளையம்பட்டி, கோபாலபுரம், கோவிலாங்குலம், சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் விருதுநகர் செல்வதற்கு இந்த பாதையைத் தான் அதிகம் பயன்படுத்துகின்றனர்.
மோசமான இந்த சாலையால் இருசக்கர வாகன விபத்துகள் அடிக்கடி நிகழ்கின்றன. விவசாயிகளும் இந்த பாதையை அதிகம் பயன்படுத்துகின்றனர். இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


No comments:
Post a Comment