பேன்மருந்து குடித்த மூதாட்டி இறப்பு. - தமிழக குரல் - விருதுநகர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 7 November 2022

பேன்மருந்து குடித்த மூதாட்டி இறப்பு.

அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் எம்.டி.ஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் பாக்கியலட்சுமி (70) இவர் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் பாக்கியலட்சுமி வீட்டில் இருந்த பேன் மருந்தை எடுத்துக் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். 

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது மகள் கார்த்திகைச்செல்வி(42) அவரை அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். மேலும் மேல்சிகிச்சைக்காக மதுரை  அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பாக்கியலட்சுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் இந்த சம்பவம் குறித்து கார்த்திகைச்செல்வி புகாரின்பேரில் நகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

No comments:

Post a Comment

Post Top Ad