அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடி போலீசார் நேற்று(06-11-2022) வேலாயுதபுரம் விலக்கு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியான வகையில் கையில் சாக்கு பையுடன் நின்று கொண்டிருந்த ஆத்திப்பட்டியை சேர்ந்த ஜெயராஜ்(58) கஞ்சநாயக்கன்பட்டியை சேர்ந்த ராஜகுரு(42) ஆகிய இருவரையும் பிடித்து விசாரித்ததில் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர்.

அவர்கள் வைத்திருந்த சாக்கு பையை சோதித்த போது அதில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து சுமார் ரூ 5000 மதிப்புடைய புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் கைது செய்தனர்
No comments:
Post a Comment