இருசக்கர வாகனத்தில் சென்றவர் கீழே விழுந்து விபத்து. - தமிழக குரல் - விருதுநகர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 7 November 2022

இருசக்கர வாகனத்தில் சென்றவர் கீழே விழுந்து விபத்து.


அருப்புக்கோட்டை அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் முனீஸ்வரன். முனீஸ்வரன் நேற்று (6-11-2022) தனது சொந்த வேலையாக பஜார் சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது பாவடித்தோப்பு அருகே வளைவில் திரும்பும் போது நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடைந்தார் 


அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து நகர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad