மாணவர்கள் ஆசிரியர்களை மறந்துவிட கூடாது- எஸ்.பி பேச்சு. - தமிழக குரல் - விருதுநகர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 7 November 2022

மாணவர்கள் ஆசிரியர்களை மறந்துவிட கூடாது- எஸ்.பி பேச்சு.

அருப்புக்கோட்டை எஸ்‌.பி.கே. ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர் மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி வைத்தார். 


மேலும் தமிழ்நாடு அளவில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்று தேசிய அளவில் போட்டிகளுக்கு செல்லவுள்ள மாணவர்களை பாராட்டி பதக்கங்களை வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். 


இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர் பேசுகையில் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் எந்த நிலைக்கு சென்றாலும் தங்கள் ஆசிரியர்களை நினைவில் கொள்ள வேண்டும் எனவும் பெற்றோர்கள் போலவே ஆசிரியர்கள் தங்களுடைய மாணவர்கள் உயர்ந்த நிலையை அடையும் போது மகிழ்ச்சி அடைவார்கள். 


விளையாட்டு துறையில் மாணவர்களை ஊக்குவிக்கும் போது அந்த மாணவர்கள் நாளைய சமுதாயத்தை திறம்பட நடத்துவதற்கு தகுதி பெற்றவர்களாக மாறுகிறார்கள். நாம் கல்வியில் அறிவை பெறுகிறோம் அதேபோல் விளையாட்டிலும் உடல் திறனை பக்குவப்படுத்தி கொண்டால் தலைமை பண்பு வளரும்.  விளையாட்டில் தனியாக வெற்றி பெற்றுவிட முடியாது மனம் மூளை உடல் மூன்றும் இணைந்துதான் விளையாட்டில் வெற்றி பெறமுடியும் அதேபோல் சக வீரர்களுடன் அரவணைத்து வழிநடத்தினால் தலைமை பண்பு இருந்தால் மட்டுமே விளையாட்டு போட்டியில் வெற்றி பெறமுடியும்.


மாணவர்களிடையே விளையாட்டை அதிகப்படுத்தும் விதமாக தேர்வுகளில் ஸ்போர்ட்ஸ் கோட்டா மூலம் மதிப்பெண்கள் வழங்கி ஊக்கப்படுத்தி வருவதாகவும் இதை மாணவர்கள் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும் எனவும் மாணவர்கள் சிந்தித்து செயல்பட வேண்டும் எந்த ஒரு சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் அளவிற்கு தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் எந்த ஒரு செயலையும் திட்டமிடலுடன் மாணவர்கள் செயல்பட்டு பக்குவப்படுத்தி கொள்ள வேண்டும் என்று பேசினார். 

No comments:

Post a Comment

Post Top Ad