ராஜபாளையம் அருகே, ரயில்வே துறையில் வேலை வாங்கித் தருவதாக 2 லட்சம் ரூபாய் மோசடி; 2 பேர் மீது வழக்கு. - தமிழக குரல் - விருதுநகர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 13 December 2022

ராஜபாளையம் அருகே, ரயில்வே துறையில் வேலை வாங்கித் தருவதாக 2 லட்சம் ரூபாய் மோசடி; 2 பேர் மீது வழக்கு.


விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள புத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் மாசிலாமணி (46). இவருக்கு தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள மாங்குடி பகுதியைச் சேர்ந்த தாமோதரன் (65) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 


இந்த நிலையில் தாமோதரனிடம், தனது உறவினர் செந்தில்குமார் என்பவரை அறிமுகப்படுத்தி, அவர் சார் ஆட்சியராக பணிபுரிந்து வருவதாக கூறியுள்ளார். இதனை நம்பிய தாமோதரன், தனது பேரனுக்கு ரயில்வே துறையில் வேலை வாங்கித் தருமாறு, கடந்த 2018ம் ஆண்டு மாசிலாமணி மற்றும் செந்தில்குமாரிடம் 2 லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்துள்ளார். பணத்தை வாங்கிக்கொண்ட இருவரும் சொன்னபடி, தாமோதரனின் பேரனுக்கு வேலை வாங்கித் தரவில்லை. 


இதனால் அவர்களிடம் பணத்தை திரும்பத் தருமாறு தாமோதரன் கேட்டு வந்தார். ஆனால் பணத்தை திருப்பிக் கொடுக்காமல், இரண்டு பேரும் சேர்ந்து அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்து தாமோதரன் கடந்த ஆண்டு ராஜபாளையம் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். நீதிமன்ற உத்தரவின் பேரில் மாசிலாமணி, செந்தில்குமார் மீது தளவாய்புரம் காவல்நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad