விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியின் முன்னாள் உறுப்பினர் ராதாகிருஷ்ணன் (67), உடல்நலம் பாதிப்பால் நேற்று மரணமடைந்தார். அதிமுக கட்சியின் முக்கிய நிர்வாகியாக இருந்த அவரது உடலுக்கு, பல்வேறு கட்சிகளின் முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர்.

நேற்று மாலை, அதிமுக கட்சியின் விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி, முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட அதிமுக கட்சி நிர்வாகிகள், மறைந்த எம்.பி. ராதாகிருஷ்ணன் உடலுக்கு மாலையணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.

No comments:
Post a Comment