தொடர் மழையால், நெற்பயிர்கள் பாதிப்பு. - தமிழக குரல் - விருதுநகர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 15 December 2022

தொடர் மழையால், நெற்பயிர்கள் பாதிப்பு.


காரியாபட்டியில் பெய்த தொடர் மழையினால் நெற்பயிர்கள் தண்ணீரில் முழ்கியது.   200 ஏக்கர் விளைச்சல் பாதிப்பு அடைந்துள்ளது. காரியாபட்டியல், பெய்த தொடர் மழையினால் நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன.


விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி, தாலுகா கம்பிக்குடி, பாப்பனம், அல்லாள பேரி, மறைக்குளம், சத்திரம் புளியங்குளம், மேலக் கள்ளங்குளம் உட்பட 50-க்கு மேற்பட்ட கிராமங்களில் சுமார் 700 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நடைபெற்று வருகிறது.


நேற்று பெய்த மழையினால், காரியாபட்டி அருகே பாப்பனம் கிராமத்தில் சுமார் 200 ஏக்கர் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் தண்ணீரில் முழ்கி சேதமடைந்தன. இதனால்  நெற்பயிர்களை அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.   


மழை சேதம், காட்டு பன்றிகள் பயிர்களை அழிப்பது போன்ற சம்பவங்களால் விவசாயிகள் மிகவும் வேதனையடைந்துள்ளனர். காரியாபட்டி வேளாண்மைதுறை, வருவாய்துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad