விருதுநகர் மாவட்டத்தில் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டுவந்த 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல், பாண்டியன் நகர் பகுதியைச் சேர்ந்த சுப்புராஜ், சித்துராஜபுரம் பகுதியைச் சேர்ந்த ஜான்பீட்டர் ஆகிய இருவரும் தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதுடன், பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். இவர்கள் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது.

மேலும் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள ராமசாமியாபுரம் பகுதியைச் சேர்ந்த மகேஷ் என்பவரும் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டதற்காக பல்வேறு வழக்குகள் உள்ளன. தொடர்ந்து பொது மக்களுக்கு அச்சம் விளைவிக்கும் வகையில் நடந்துகொள்ளும் இவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். எஸ்.பி. பரிந்துரையின் பேரில் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டுவந்த 3 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி உத்தரவிட்டார்.
அதனையடுத்து போலீசார், குற்றவாளிகள் 3 பேரையும் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

No comments:
Post a Comment