ஊராட்சி மன்றத் தலைவர் ராக்கம்மாள் கருப்பையா தலைமை வகித்தார். ஒன்றியக் குழுத் தலைவர் முத்துமாரி, துணைத் தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு ஆசிரியர் பயிற்சி மைய முதல்வர் டாக்டர் வெள்ளைத்துரை விளையாட்டுப் போட்டியை தொடங்கிவைத்தார்.
போட்டியில் பங்குபெற்ற மாணவர்கள் அனைவருக்கும், காரியாபட்டி கீரின் பவுண்டேசன் நிர்வாகி. பொன்ராம் மரக்கன்றுகள் வழங்கினார். நிகழ்ச்சியில், ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், நீளம் பாய்தல், சிலம்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற வர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

மாவட்ட மனித பாதுகாப்பு கழகம் சார்பில் மாவட்டத் தலைவர் முனீஸ்வரன் மாவட்டச் செயலாளர் பிரின்ஸ், ஒன்றிய கவுன்சிலர்கள் சிதம்பர பாரதி, சேகர், ஊராட்சி மன்றத் தலைவர் கணேசன், நேரு யுவகேந்திரா சேவைத் தொண்டர் மலைச்சாமி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

No comments:
Post a Comment