ராஜபாளையம் பொன்விழா மைதானம் பகுதியில் , அஇஅதிமுக சார்பில் வடக்கு நகரச் கழக செயலாளர் வக்கீல் துரை முருகேசன் தலைமையில், திமுக அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட அம்மா பேரவை கழகச் செயலாளர் கிருஷ்ணராஜ் மற்றும் தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் நவரத்தினம், வடக்கு ஒன்றிய கழக செயலாளர் குருசாமி மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர கழக நிர்வாகிகள் தொண்டர்கள் என 500க்கும் மேற்பட்டோர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். சொத்துவரி உயர்வு, பால் விலைஉயர்வு மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை குறித்து தி மு க அரசை கண்டித்து, கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், அதிமுக சார்பில் ஜவகர் மைதானம் பகுதியில் நடைபெற்ற தெற்கு நகர கழக செயலாளர் பரமசிவம் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்து கொண்டு திமுக அரசைக் கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

No comments:
Post a Comment