விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள கிளியம்பட்டி பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், தனது வீட்டின் முன்பாக தகரத்தால் அமைக்கப்பட்டிருந்த குளியலறையில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த அய்யனார் (50) என்ற முதியவர், குளியலறையின் தகரத்தை அகற்றிவிட்டு இளம்பெண் குளிப்பதை வேடிக்கை பார்த்துள்ளார்.

இதனை கவனித்துவிட்ட இளம்பெண் கத்தி கூச்சலிட்டார். அதற்கு அய்யனார், அந்தப் பெண்ணை தகாத வார்த்தைகளால் பேசி அவரை மிரட்டிவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டார். இது குறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண், தனது கணவருடன் மாரனேரி காவல் நிலையத்திற்கு சென்று புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார், அய்யனாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

No comments:
Post a Comment