அருப்புக்கோட்டை அருகே, சரக்கு வாகனத்தில் கடத்தப்பட்ட 44 மூடை ரேசன் அரிசி பறிமுதல்; ஒருவர் கைது. - தமிழக குரல் - விருதுநகர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 19 December 2022

அருப்புக்கோட்டை அருகே, சரக்கு வாகனத்தில் கடத்தப்பட்ட 44 மூடை ரேசன் அரிசி பறிமுதல்; ஒருவர் கைது.


விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே, சரக்கு வாகனத்தில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக தாலுகா காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் கஞ்சநாயக்கன்பட்டி விலக்கு பகுதியில், தாலுகா காவல் நிலைய சார்பு ஆய்வாளர் சீனிவாசன் தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். 


அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அந்த சரக்கு வாகனத்தில் 44 மூடைகளில், சுமார் 2 ஆயிரம் கிலோ ரேசன் அரிசி இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து ரேசன் அரிசி மூடைகள் கடத்தி வந்த, மதுரை களஞ்சியம் நகரைச் சேர்ந்த ராமமூர்த்தி (26) என்பவரை போலீசார் கைது செய்தனர். ரேசன் அரிசி மூடைகளை பறிமுதல் செய்த போலீசார், கடத்தலுக்கு பயன்படுத்திய சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்து, வாகன உரிமையாளர், மதுரை சந்தைப்பேட்டை பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad