விருதுநகர் மாவட்டத்தில், வரும் 21 மற்றும் 22ம் தேதிகளில் கல்விக்கடன் வழங்கும் முகாம். - தமிழக குரல் - விருதுநகர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 19 December 2022

விருதுநகர் மாவட்டத்தில், வரும் 21 மற்றும் 22ம் தேதிகளில் கல்விக்கடன் வழங்கும் முகாம்.

விருதுநகர் மாவட்டத்தில் கல்லூரி மாணவர்களின் கல்விக்கான சிறப்பு கல்விக்கடன் வழங்கும் முகாம் நடைபெற உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் தகவல் வெளியிட்டுள்ளார். இது குறித்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் வகையில் மாவட்டத்தின் முன்னோடி வங்கிகள் மற்றும் அனைத்து வங்கிகளின் சார்பில், சிறப்பு கல்விக்கடன் முகாம் நடைபெற உள்ளது. 

வரும் 21ம் தேதி (புதன் கிழமை), 22ம் தேதி (வியாழன் கிழமை) ஆகிய 2 நாட்களிலும், காலை 10 மணி முதல், மாலை 5 மணி வரையில் சிறப்பு முகாம் நடைபெறகிறது. இந்த சிறப்பு கல்விக்கடன் முகாம்கள் சாத்தூர் பகுதி மாணவர்களுக்காக சாத்தூர் எஸ்.ஆர்.என்.எம். கல்லூரி மற்றும் பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரி, அருப்புக்கோட்டை ஸ்ரீசவுடாம்பிகா பொறியியல் கல்லூரி, ராஜபாளையம் ராம்கோ பொறியியல் கல்லூரி, திருவில்லிபுத்தூர் ஸ்ரீபாலகிருஷ்ணா கல்லூரி, வத்திராயிருப்பு கலசலிங்கம் பல்கலைக்கழகம், காரியாபட்டி சேது பொறியியல் கல்லூரி, நரிக்குடி மற்றும் திருச்சுழி மாணவர்களுக்கு திருச்சுழி ஊராட்சி ஒன்றிய அலுவலகம், விருதுநகர் வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரி, சிவகாசி எஸ்.எப்.ஆர். மகளிர் கல்லூரியிலும் சிறப்பு கல்விக்கடன் முகாம் நடைபெறுகிறது. 


கல்விக்கடன் பெறவிரும்பும் மாணவர்கள் www.vidyalakshmi.co.in என்ற இணையதள முகவரியில் தங்களுடைய விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். விண்ணப்பத்தின் நகல்களுடன் கல்விக்கடன் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad