ராஜபாளையத்தில் திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்ததால் அறநிலையத் துறைக்கு சொந்தமான கோயில் கட்டடங்களை ஏலம் விடுவது தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைப்பு. - தமிழக குரல் - விருதுநகர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 19 December 2022

ராஜபாளையத்தில் திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்ததால் அறநிலையத் துறைக்கு சொந்தமான கோயில் கட்டடங்களை ஏலம் விடுவது தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைப்பு.


விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் மதுரை சாலையில், இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான பெத்தவநல்லூர் அருள்மிகு மாயூரநாதர் சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. ஆவரம்பட்டி, மலையடிப்பட்டி, தென்காசி சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இக் கோயிலுக்கு சொந்தமாக வணிக வளாகம், கட்டடம், குடியிருப்புகள் மற்றும் காலி மனை உள்ளது.

இந்த இடங்களை 3 வருடங்களுக்கு வாடகைக்கு விடுவதற்கான ஏலம் இன்று காலை 12 மணிக்கு மேல் நடைபெற்றது. இன்று காலை டெண்டர் மனுவும், வாடகைக்கான வரைவோலையையும் இணைத்து அதிமுக தரப்பினர் மூடப்பட்ட டெண்டர் பெட்டியில் போட்டு விட்டனர்.


அந்த சமயம் வந்த திமுகவினர் ஏலம் நடைபெறுவது குறித்து, நகரின் முக்கிய வீதிகளில் முறையான அறிவிப்பு பலகை வைக்கப்படவில்லை எனவும், ஆட்டோ உள்ளிட்டவைகள் மூலம் விளம்பரம் செய்யப் படவில்லை எனவும் புகார் தெரிவித்தனர். இதனால், ஏலத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து, கோயில் செயல் அலுவலர் ராஜா மறு ஏலம் நடைபெறும் நாள் குறித்து தேதி குறிப்பிடாமல், இன்றைய ஏலத்தை ஒத்தி வைத்ததாக அறிவித்தார்.


ஏற்கெனவே, டெண்டர் பெட்டியில் அதிமுக சார்பில் மனு அளித்தவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால் அப் பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது. பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களை சமரசம் செய்தனர். பின்னர், அவர்கள் பெட்டியில் செலுத்திய டெண்டர் மனுக்களையும், வரைவோலையையும் செயல் அலுவலர் திருப்பி வழங்கினார். 

No comments:

Post a Comment

Post Top Ad