விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே கணக்கனேந்தல் கிராமத்தில் அமைந்துள்ள நாகம்மாள்புத்துக்கோவில் திருவிழா நடைபெற்றது. காலையில், செல்வ விநாயகருக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு விழா துவங்கப்பட்டது.
விநாயகர் கோவிலிலிருந்து பக்தர்கள் அலகு குத்தி பால்குடம், முளைப்பாரி களுடன் ஊர்வலமாக நாகம்மாள் கோவிலுக்கு சென்றனர். பக்தர்கள் கொண்டுவந்த பால் நாகம்மாள் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் தேனூர் ஜெய் வராஹீ சக்தி பீடம் சிவகிரி மகரிஷி சாமிகள் முன்னிலையில் அபிஷேகங்கள் நடத்தப்பட்டது.
பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை, ஸ்ரீ புற்று நாகாத்தம்மன் தியான சக்தி பீடம் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


No comments:
Post a Comment