விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகேயுள்ள வீரசோழன் காவல் நிலையத்தில், சிவகங்கை மாவட்டம் மாரநாடு பகுதியைச் சேர்ந்த கருப்பையா (55). சார்பு ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். காவல் நிலையம் எதிரேயுள்ள கண்மாய்க்கு கருப்பையா குளிக்கச் செல்வது வழக்கம். நேற்றும் கண்மாய்க்கு குளிக்கச் சென்ற அவர் நீண்ட நேரமாகியும் காவல் நிலையத்திற்கு திரும்பி வரவில்லை.
இதனால் அங்கிருந்த போலீசார், கருப்பையாவைத் தேடி கண்மாய்க்குச் சென்றனர். கண்மாயின் கரையில் கருப்பையாவின் உடைகள் மற்றும் செல்போன் இருந்தது. இதனால், சந்தேகமடைந்த போலீசார் மற்றும் பொதுமக்கள் கண்மாயில் இறங்கி கருப்பையாவை தேடினர். கண்மாய்க்குள் இறந்த நிலையில் கிடந்த கருப்பையாவின் உடலை போலீசார் மீட்டனர். அவரது உடலை, உடற்கூறாய்விற்காக திருச்சுழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கண்மாய்க்கு குளிக்கச் சென்ற சார்பு ஆய்வாளர், மர்மமான முறையில் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் போலீசாரிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து, வீரசோழன் காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:
Post a Comment