மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி தலைமையில் நடைபெற்ற விழாவில், அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கலந்து கொண்டு, புதிய கட்டிடங்கள் கட்டும் பணிக்கான அடிக்கல்லை நாட்டினார். நிகழ்ச்சியில், அமைச்சர் ராமச்சந்திரன் பேசும்போது, தமிழக அரசு மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பொதுமக்கள் அரசின் திட்டங்களை தடையில்லாமல் பெறுவதற்கான கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

அதன் அடிப்படையில் இங்கு வட்டாட்சியர் அலுவலகத்திற்கு, அனைத்து வசதிகளுடன் கூடிய, கூடுதல் கட்டிடங்கள் கட்டுவதற்கான பணிகள் துவங்கியுள்ளது. விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று கூறினார். நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ரவிகுமார், வருவாய் கோட்டாட்சியர் கல்யாணகுமார், செயற்பொறியாளர் செல்வராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment