நிகழ்ச்சியில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசும்போது, தமிழ்நாடு அரசின் தொழில்துறை அங்கமான வழிகாட்டி நிறுவனம், தமிழ்நாடு அரசின் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் ஒற்றைச் சாளர வசதிகள் வழங்கிடும் முகமையாக செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் தமிழ்நாட்டிற்கு முதலீட்டு வாய்ப்புகளை ஈர்த்து வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில், கடந்த ஆண்டு நடைபெற்ற தொழில் முதலீட்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் சிவகாசி அருகேயுள்ள செவலூரில், ஸ்ரீசர்வலோகா நூற்பாலை அமைக்கப்பட்டுள்ளது.

சுமார் 78 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள இந்த நூற்பாலையில் நேரிடையாக 400 பேருக்கும், மறைமுகமாக 500 பேருக்கும் வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனால் இந்தப் பகுதியில் உள்ள மக்கள் மிகவும் பயனடைவார்கள். விருதுநகர் மாவட்டத்தில் மேலும் பல புதிய தொழிற்சாலைகளை கொண்டு வருவதற்கான முயற்சிகளை தமிழ்நாடு அரசு சிறப்பாக செய்து வருகிறது என்று பேசினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிகுமார், சிவகாசி கோட்டாட்சியர் விஸ்வநாதன், நூற்பாலை உரிமையாளர் ராம்முருகேசன், தமிழ்நாடு வழிகாட்டி நிறுவன மண்டல மேலாளர் சுரேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment