திருச்சுழியில் அதிமுக சார்பாக விருதுநகர் கிழக்கு மாவட்ட மொழிப்போர் தியாகிகள் வீரவணக்கநாள் பொதுக்கூட்டம். - தமிழக குரல் - விருதுநகர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 28 January 2023

திருச்சுழியில் அதிமுக சார்பாக விருதுநகர் கிழக்கு மாவட்ட மொழிப்போர் தியாகிகள் வீரவணக்கநாள் பொதுக்கூட்டம்.

திருச்சுழியில், அதிமுக சார்பாக பொதுக்கூட்டம் நடைபெற்றது. விருதுநகர் கிழக்கு மாவட்ட அதிமுக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம். திருச்சுழியில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு, மாவட்ட மாணவரணி செயலாளர்     வேங்கை மார்பன் தலைமை வகித்தார். திருச்சுழி ஒன்றிய செயலாளர்கள முத்துராமலிங்ம், முனியாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், காரியாபட்டி மேற்கு ஒன்றிய கழக செயலாளர் ராமமூர்த்திராஜ் வரவேற்று பேசினார்.


விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் கா.ரவிச்சந்திரன் சிறப்புரையாற்றினார். மாநில செய்தி தொடர்பாளர் அண்ணாதுரை, தலைமை பேச்சாளர்கள் இளமுருகன், சுந்தரம், சம்ஸ்கனி ஆகியோர் பேசினார்கள். 


மாவட்ட கழக பொருளாளர் குருசாமி, மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் சுப்ரமணியம், அம்மா பேரவை துணை செயலாளர் சேதுராமானுஜம், சிறுப்பான்மை நலப்பிரிவு துணை தலைவர் சித்திக்  அண்ணா தொழிற்சங்க துணை தலைவர் வீரேசன், அருப்புக்கோட்டை தெற்கு ஒன்றிய செயலாளர் யோகவாசுதேவன், நரிக்குடி  ஒன்றிய ரவிச்சந்திரன், பூமிநாதன், சாத்தூர் ஒன்றிய செயலாளர் சண்முகக்கனி, திருச்சுழி ஊராட்சி செயலாளர் பாலமுருகன், அருப்புக்கோட்டை வடக்கு ஒன்றிய செயலளர் சங்கரலிங்கம், வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன், சாத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் தேவதுரை அருப்புக்கோட்டை நகர செயலாளர் சக்திவேல்பாண்டியன், நரிக்குடி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் பஞ்சவர்னம், பொதுக்குழு உறுப்பினர்கள் வீரசுப்ரமணியம், பழனி, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் மச்சேஸ்வரன், மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு செயலாளர் சேரன் இஸ்மாயில் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கருப்பசாமி பாண்டியன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர்கள் கிருஷ்ணன், சுப்பையா, லோகையாசாமி, உள்ளாட்சி கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், மாணவரணி நிர்வாகிகள் பங்கேற்றனர், காரியாபட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் தோப்பூர் முருகன் நன்றியுரை வழங்கினார். 

No comments:

Post a Comment

Post Top Ad