சிவகாசி அருகே, இலவச எலும்பு நோய் பரிசோதனை மற்றும் பொது மருத்துவ முகாம். - தமிழக குரல் - விருதுநகர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 30 January 2023

சிவகாசி அருகே, இலவச எலும்பு நோய் பரிசோதனை மற்றும் பொது மருத்துவ முகாம்.


விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள விஸ்வநத்தம் பகுதியில், விஸ்வநத்தம் ஊராட்சி மன்றம், சுருதி மருத்துவமனை, 02 பசுமை நண்பர்கள் அறக்கட்டளை, துளிர்கள் இணையம், ஹேண்ட் இன் ஹேண்ட் அமைப்பு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு சேவை மையம் இணைந்து பொது மருத்துவம் மற்றும் எலும்பு நோய் மருத்துவ பரிசோதனை முகாமை நடத்தினர். 

விஸ்வநத்தம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளியில் நடைபெற்ற மருத்துவ முகாமை, விஸ்வநத்தம் ஊராட்சி மன்றத்தலைவர் நாகராஜன் தலைமையில், 02 பசுமை நண்பர்கள் அறக்கட்டளை நிறுவனர் மாரியப்பன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் நாகேந்திரன், ஹேண்ட் இன் ஹேண்ட் விருதுநகர் மாவட்ட பொறுப்பாளர் ஈஸ்வரி, நுகர்வோர் பாதுகாப்புசேவை மைய மாநில தலைவர் சுப்பிரமணியம் துவக்கி வைத்தனர். சுருதி மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் மணிகண்டன் தலைமையிலான மருத்துவர்கள் மருத்துவ பரிசோதனை முகாமில் கலந்து கொண்டனர். 


முகாமில் சுமார் 200க்கும் மேற்பட்ட பயனாளர்களுக்கு மருத்துவ சிகிச்சை, மருத்துவ பரிசோதனைகள், மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டது. மருத்துவ முகாம் ஏற்பாடுகளை ஊராட்சி செயலாளர் செல்வம், அலுவலக உதவியாளர் விஜயகுமார் உள்ளிட்டோர் சிறப்பாக செய்திருந்தனர். துளிர்கள் இணைய பொறுப்பாளர் மீனா நன்றி கூறினார். 

No comments:

Post a Comment

Post Top Ad