
இந்த நிலையில், 2021-2023 ஆண்டுக்கு கூலி ஒப்பந்தம் செய்வதற்கு முதலாளிகள் முன்வராத காரணத்தினாலும் தங்களுக்கு சம்பளத்தில் 75% உயர்த்தி தர வேண்டும் போனஸ் 20% சதவீதம் உயர்த்தி தரவேண்டும் என கோரிக்கை வலியுறுத்தி கடந்த 9 நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் பல்வேறு கட்டங்களில் பேச்சுவார்த்தை நடத்தும் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில், போராட்டம் உச்சக் கட்டத்தை அடைந்தது. ஏ.ஜ.டி.மயு. வட்டாரத் தலைவர் அய்யனார், சி.ஜ.டி.யு.சி வட்டாரத் தலைவர் ராசு தலைமையில் செட்டியார்பட்டி கிராமநிர்வாக அலுவலர் அலுவலகம் முன்பு இன்று கஞ்சி திட்டி திறந்து போராட்டத்தை வலுப்பெற செய்தனர்.
ஈரோடு இடைத் தேர்தலில் கவனம் செலுத்தி வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உயிரோடு பட்டினியால் வாடிவதங்கி கொண்டிருக்கும் தளவாய்புரம் விசைத்தறி தொழிலாளர்கள் பிரச்சனையில் கவனம் செலுத்தி முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என, விசைதறி தொழிலாளர்கள் முதலமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment