குரண்டியில் ஊரக பங்கேற்பு மதிப்பீட்டு பணியில் வேளாண் கல்லூரி மாணவிகள். - தமிழக குரல் - விருதுநகர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 8 February 2023

குரண்டியில் ஊரக பங்கேற்பு மதிப்பீட்டு பணியில் வேளாண் கல்லூரி மாணவிகள்.


மதுரை மாவட்டம், அரசு வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவிகள், ஊரக வேளாண்மை பணி அனுபவத் திட்டத்தின் கீழ் காரியாபட்டி வட்டாரத்தில் வேளாண் சார்ந்த பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதில் ஒரு பகுதியாக குரண்டி என்னும் கிராமத்தில் மாணவிகள் திருவரசி, திரிஷா, உமா, வானதி, விக்னேஷ்வரி, நவோதயா, அனகா, அஞ்சலி மற்றும் சரண்யா ஆகியோர் ஊரக பங்கேற்பு மதிப்பீட்டில் ஈடுபட்டனர். இதில், அந்த கிராமத்தின் சமூக வரைபடம், வளங்கள் வரைபடம், பயிர் கால அட்டவணை, தினசரி கால அட்டவணை மற்றும் குறைகள் மரம் இவற்றை கிராம மக்களின் உதவியோடு வரைந்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 

No comments:

Post a Comment

Post Top Ad