விழாவுக்கு, தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமை வகித்தார். மதுரை அக்ரி கணேசன், ராஜேந்திரன் தேவர் என்ற ஜெயபெருமாள் நகராட்சி துறையின் நிர்வாகஇயக்குனர் பொன்னையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில், மறைந்த பாலுச்சாமி தேவரின் திருவுருவப்படத்தையும், அறக்கட்டளையின் பெயர் பலகையை அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்துவைத்து பேசினார். மேலும், விழாவில் ஏழை மாணவர்களின் கல்வி உதவிதொகை, விவசாயிகளுக்கு வேளாண் உபகரணங்கள், பெண்களுக்கு தையல் மிஷின் மாற்று திறனாளிகளுக்கு மூன்றுசக்கர வண்டி ஆகிய உதவிகளை அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார். நிகழ்ச்சியில், மதுரை எம். எல் .ஏ தளபதி, திருச்சுழி யூனியன் தலைவர் பொண்ணுத்தம்பி, காரியாபட்டி பேரூராட்சித் தலைவர் செந்தில், திமுக ஒன்றிய செயலாளர்கள் செல்லம், கண்ணன், போஸ் மாவட்டக் கவுன்சிலர் தங்கதமிழ்வாணன் பொதுக்குழு உறுப்பினர் சிவசக்தி ஊராட்சி மன்றத் தலைவர் வேப்பங்குளம் ஆதிஸ்வரன், உள்பட பலர் கலந்துகொண்டனர். எஸ். பி .எம் . அறக்கட்டளை நிர்வாகி அழகர்சாமி நன்றி கூறினார்.
No comments:
Post a Comment