சிவகாசியில் ரம்ஜான் திருநாளை முன்னிட்டு இலவச புத்தாடை தேசிய லீக் கட்சியினர் வழங்கினர். - தமிழக குரல் - விருதுநகர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 21 April 2023

சிவகாசியில் ரம்ஜான் திருநாளை முன்னிட்டு இலவச புத்தாடை தேசிய லீக் கட்சியினர் வழங்கினர்.


சிவகாசியில், ரம்ஜான் முன்னிட்டு புத்தாடைகள் வழங்கப்பட்டது. விருதுநகர் மாவட்டம், இந்திய தேசிய கட்சி சார்பாக, சிவகாசியில் ரம்ஜான் பெருநாளை முன்னிட்டு புத்தாடைகள் வழங்கும் நிகழ்ச்சி சிவகாசி ராயல் மண்டபத்தில் நடைபெற்றது. 

இந்திய தேசிய கட்சியின் சட்ட ஆலோசகர் சந்திரசேகரன் தலைமை வகித்தார். நகர் தலைவர் முகமதுகான்,  செயலாளர் முத்து விலாசா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்திய தேசிய லீக் கட்சி மாநில செயலாளர் செய்யது ஜஹாங்கீர், புத்தாடைகள் வழங்கினார். 

நிகழ்ச்சியில், மாநகர்மன்ற உறுப்பினர்கள் வேல்ராஜ், ரேணுகா நித்திலா லீக் கட்சி பொருளாளர் முத்து விலாசா, மாவட்ட கொள்கைபரப்பு செயலாளர் கராத்தே அக்பர், அரபிக்கல்லூரி முன்னாள் முதல்வ முகமது சிந்தா ஷா, அப்துல் சத்தார், காங்கிரஸ் கட்சி ஜப்பார், இந்திய முஸ்லீம் லீக் அப்துல் சத்தார் ஆகியோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad