திருவில்லிபுத்தூர் அருகே, தடை செய்யப்பட்ட குட்கா கடத்தி வந்தவர் கைது; 195 கிலோ குட்கா, கார் பறிமுதல். - தமிழக குரல் - விருதுநகர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 19 June 2023

திருவில்லிபுத்தூர் அருகே, தடை செய்யப்பட்ட குட்கா கடத்தி வந்தவர் கைது; 195 கிலோ குட்கா, கார் பறிமுதல்.


விருதுநகர் மாவட்டம்  திருவில்லிபுத்தூர் பகுதியில், தடை செய்யப்பட்டுள்ள குட்கா விற்பனை அதிகரித்து இருப்பதாகவும், கர்நாடகா மாநிலத்திலிருந்து குட்கா பொருட்கள் கடத்தி வரப்பட்டு விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 


தகவலின் பேரில், திருவில்லிபுத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் சபரிநாதன் தலைமையில், போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள திருவண்ணாமலை பகுதியிலிருந்து வந்த காரை, சந்தேகத்தின் பேரில் நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அந்தக் காரில், 195 கிலோ அளவிலான தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். குட்கா கடத்தலில் ஈடுபட்ட திருவண்ணாமலை பகுதியைச் சேர்ந்த கலைச்செல்வம் (32) என்பவரை போலீசார் கைது செய்தனர். 


இது குறித்து திருவில்லிபுத்தூர் நகர் காவல்நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து, கர்நாடகா மாநிலத்திலிருந்து கடத்தி வரப்பட்ட 195 கிலோ குட்காவையும், கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad