விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், மரங்களின் அவசியங்களை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. சிவகாசி மாநகராட்சி சார்பில், பசுமை பாதுகாப்பு இயக்கம் என்ற பெயரில் பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக 'கிரீன் சிவகாசி' என்ற பெயரில், மாநகராட்சி பகுதியில் மரங்களின் அவசியம் குறித்தும், மரங்களின் தேவைகள் குறித்தும், மரங்களை பாதுகாப்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சாலையோரம் உள்ள மரங்கள் அனைத்திலும் பச்சை, மஞ்சள், பச்சை என வர்ணங்கள் பூசப்பட்டு வருகின்றன.
'கிரீன் சிவகாசி' விழிப்புணர்வு வர்ணம் பூசும் திட்டத்தை மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம் துவக்கி வைத்தார். இந்தப் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் சங்கரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 'கிரீன் சிவகாசி' திட்டத்தின் மூலமாக, சிவகாசி மாநகராட்சி பகுதியில், சாலையோரம் உள்ள மரங்கள் அனைத்திற்கும் வர்ணங்கள் பூசப்பட்டு கண்ணை கவரும் வகையில் பளிச்சென்று காட்சி தருகின்றன. மாநகராட்சியின் இந்த பசுமை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கு பொது மக்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.


No comments:
Post a Comment