விருதுநகர் அருகே சாலை விபத்தில் சிக்கி, நிதி நிறுவன ஊழியர்கள் 2 பேர் உயிரிழப்பு. - தமிழக குரல் - விருதுநகர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 6 June 2023

விருதுநகர் அருகே சாலை விபத்தில் சிக்கி, நிதி நிறுவன ஊழியர்கள் 2 பேர் உயிரிழப்பு.


விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள வடபட்டி பகுதியைச் சேர்ந்தவர் செல்வகணேஷ் (30), மண்ணுக்குமீட்டான்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சேதுபதி (30). இவர்கள் இருவரும் சிவகாசியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர். நேற்று இவர்கள் இருவரும் நிதி நிறுவன வேலை சம்பந்தமாக விருதுநகருக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுவிட்டு, அங்கிருந்து சிவகாசிக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். 


சிவகாசி - விருதுநகர் சாலையில் உள்ள சாய்பாபா கோவில் விலக்கு பகுதியில் இவர்கள் வந்து கொண்டிருந்த போது, சிவகாசியில் இருந்து மதுரைக்கு சென்று கொண்டிருந்த அரசு பேருந்து இருசக்கர வாகனத்தில் பயங்கரமாக மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கிய நிதி நிறுவன ஊழியர்கள் செல்வகணேஷ், சேதுபதி இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து தகவலறிந்த ஆமத்தூர் காவல்நிலைய போலீசார் விரைந்து சென்று, உயிரிழந்த 2 பேரின் உடல்களையும் மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 


விபத்து ஏற்படுத்திய அரசு பேருந்து ஓட்டுநர் மல்லி பகுதியைச் சேர்ந்த பெரியசாமி (39) மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

No comments:

Post a Comment

Post Top Ad