இது குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த விஜயன் (30), பிரபாகரன் (30), அழகர்சாமி (23), சரவணபாண்டி (28), போத்திராஜன் (24), தங்கமலை (27) ஆகிய 6 பேரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 6 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட 6 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யுமாறு விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசப்பெருமாள், மாவட்ட ஆட்சியர் ஜெயசீலனுக்கு பரிந்துரை செய்தார்.
அவரது பரிந்துரையை ஏற்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன், மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 6 பேரும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்வதற்கான உத்தரவை, சிறை அதிகாரிகளுக்கு அனுப்பி உள்ளார்.


No comments:
Post a Comment