விருதுநகரில், பாராளுமன்ற உறுப்பினர் தலைமையில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம். - தமிழக குரல் - விருதுநகர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 9 June 2023

விருதுநகரில், பாராளுமன்ற உறுப்பினர் தலைமையில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம்.


விருதுநகரில், (DISHA) - 2023 - 2024ஆம் ஆண்டிற்கான முதலாம் காலாண்டிற்கான ஆலோசனைக் கூட்டம், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் நடைபெற்றது. விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் வரவேற்று பேசினார். 


கூட்டத்தில், சிவகாசி எம்.எல்.ஏ. அசோகன், விருதுநகர் எம்.எல்ஏ. சீனிவாசன், சாத்தூர் எம்.எல்.ஏ. ரகுராமன், சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம் உட்பட பலர் கலந்து கொண்டனர். நடப்பு காலாண்டில் செய்ய வேண்டிய வளர்ச்சிப் பணிகள் குறித்து விரிவாக பேசப்பட்டது. மேலும், விருதுநகர் மாவட்டத்தில் புதிய தொழிற்சாலைகள் அமைப்பது குறித்தும், தொழில் முதலீடுகள் மூலமாக வேலை வாய்ப்பினை அதிகரிப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. 


விருதுநகர் மாவட்டத்திற்கு ஒன்றிய அரசு வழங்க வேண்டிய நிதிகள் குறித்து எம்.பி. மாணிக்கம் தாகூர் பேசினார், கூட்டத்தில், அனைத்து துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad