சிவகாசி அருகே, விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி மண்டை உடைப்பு; விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநகராட்சி கவுன்சிலர் உட்பட 3 பேர் கைது. - தமிழக குரல் - விருதுநகர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 20 July 2023

சிவகாசி அருகே, விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி மண்டை உடைப்பு; விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநகராட்சி கவுன்சிலர் உட்பட 3 பேர் கைது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல், பள்ளபட்டி சாலை பகுதியைச் சேர்ந்தவர் ராஜா (எ) தலித்ராஜா (48). இவர் விடுதலை  சிறுத்தைகள் கட்சியின் விருதுநகர் மாவட்ட துணைச் செயலாளராக உள்ளார். இவருக்கும், இதே கட்சியைச் சேர்ந்த அசோக்குமார் என்பவருக்கும் உட்கட்சி தகராறு இருந்து வந்தது. அசோக்குமார், சிவகாசி மாநகராட்சியின் 23வது வார்டு கவுன்சிலராக இருந்து வருகிறார். தலித்ராஜாவிற்கும், அசோக்குமாருக்கும் ஏற்பட்ட தகராறு குறித்து கட்சி நிர்வாகிகள் தலைமைக்கு புகார் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. 


இந்த நிலையில் திருத்தங்கல் திருவள்ளுவர் காலனியில் இருந்த தலித்ராஜாவிற்கும், கவுன்சிலர் அசோக்குமார் மற்றும் இவரது ஆதரவாளர்கள் செல்வா, தங்கராஜ், மனிதநேயன், மோகன் ஆகியோருக்கும் தகராறு ஏற்பட்டது. தகராறில் தலித்ராஜாவை, அசோக்குமார் இரும்பு கம்பியால் தாக்கினார். இதில் தலித்ராஜா மண்டை உடைந்தது. உடனடியாக அங்கிருந்தவர்கள், தலித்ராஜாவை சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். 


இது குறித்து விசிக கட்சி நிர்வாகி தலித்ராஜா, சிவகாசி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார், மாநகராட்சி கவுன்சிலர் அசோக்குமார், செல்வா, தங்கராஜ் ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர். தலைமறைவாக இருக்கும் மனிதநேயன், மோகன் ஆகிய இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 



சிவகாசி அருகே, உட்கட்சி தகராறில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளுக்குள் அடிதடி நடந்த சம்பவம் கட்சி தொண்டர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad