நிகழ்ச்சியில் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசும்போது, கடந்த அதிமுக அரசு ஏழைகளுக்கான அரசாக இருந்தது. முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் அனைத்து பொருட்களின் விலையும் கட்டுக்குள் இருந்தது. காய்கறி மற்றும் மளிகைப் பொருட்களின் விலை சாமானிய, ஏழை மக்களை பாதிக்காத வகையில் இருந்தது. ஆனால் தற்போதைய திமுக அரசில் விலைவாசி விண்ணை முட்டும் அளவிற்கு சென்று கொண்டிருக்கிறது. தக்காளி விலை வரலாறு காணாத அளவில் கிலோ 250 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வெங்காயத்தின் விலையைக் கேட்டாலே, தாய்மார்களின் கண்களில் கண்ணீர் வருகிறது.
மளிகைப் பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. ஆனால் இதனை எல்லாம் கட்டுப்படுத்த வேண்டிய முதல்வர் ஸ்டாலின், வழக்கம் போல விலை உயர்வுக்கு காரணம் மத்திய அரசு தான் என்று பொய்யை கூறி வருகிறார். ஸ்டாலின் முதல்வராக இருப்பதை ஏழை மக்கள் விரும்பவில்லை. அதிமுக கட்சியை எடப்பாடி பழனிச்சாமி சீராக்கி செம்மைபடுத்தி வருகிறார். தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிச்சாமியை பொது செயலாளராக அங்கீகரித்துள்ளது.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவிற்கு பின்பு மக்கள் நலனில் அக்கறையுள்ள ஒரு மனிதர் இருக்கிறார் என்றால் அது அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி தான். மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றனர். மக்கள் விரோதமாக செயல்படும் திமுகவை தூக்கி ஏறிய தயாராகி விட்டனர். அதிமுக கட்சியில் புதியதாக இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் ஆர்வமாக சேர்ந்து வருகின்றனர். மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டவர்கள் இன்று அதிமுக கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
அவர்கள் அனைவருக்கும் அதிமுக கட்சியில் உரிய அங்கீகாரம் கிடைக்கும். வரும் நாடாளுமன்ற தேர்தலில், மக்கள் அதிமுக கட்சிக்கு வாக்களிக்க தயாராகி விட்டனர் என்று பேசினார். நிகழ்ச்சியில் மாற்றுக் கட்சியிலிருந்து அதிமுக கட்சியில் சேர்ந்த அனைவருக்கும் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி சால்வை அணிவித்து, உறுப்பினர் அடையாள அட்டையை வழங்கினார். நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment